Wednesday, January 26, 2011

உலகக்கோப்பை கிரிக்கெட்: எனக்கு வந்த அதிர்ச்சி யோசனை!




தினமும் கண்ட கண்ட செய்திகளைப் படித்து படித்து இப்போ மூளையே மழுங்கி விட்டது. எது நடந்தாலும் நமக்கு ஒண்ணும் ஆகலேன்னா பரவாயில்லைன்னு நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். எதைப் பற்றித்தான் கவலைப்படுவது? இந்த அரசியல் கட்சிகள் தந்திரமாக மக்களை ஏதாவது ஒரு கவலையிலேயே வைத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் சில தினங்கள் முன்பு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த போது தோன்றிய ஒரு விபரீதமான யோசனை. அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒரு வில்லங்கமான திட்டம் அது. எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை.

சமீபகாலமாக மத்திய அரசு அன்றாடம் ஒரு பிரச்சனையைச் சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது.  ஸ்பெக்ட்ரம், விலைவாசி, வெங்காயம், பெட்ரோல், ஸ்விங் வங்கி கணக்குகள் என்று அரசிற்கு ஏகத்திற்கும்  கெட்ட பெயர் வந்துவிட்டது. சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்து மக்கள் எல்லாப் பிரச்சனைகளையும் மறந்துவிடமாட்டார்களா என்று பார்ஹ்ட்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வென்று விட்டால் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்தானே? அப்போ அரசே ”முயன்று” நமது அணிக்கு கோப்பை கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டால் பிரச்சனைகள் (தற்காலிகமாவாவது) மறக்கப்பட்டு விடுமல்லவா? இதுதான் அய்யா எனக்கு ஏற்பட்ட அந்த வில்லங்கமான யோசனை!

உண்மையிலேயே அப்படி நடந்தாலும் நடக்கலாம். எதற்கும் இருக்கட்டும் என்று எல்லார் காதிலும் சும்மா போட்டு வைக்கிறேன். ஒருவேளை அப்படியே நடந்துவிட்டால் சும்மா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காமல், நமது அணியைப் பாராட்டி உங்கள் தேசபக்திக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

6 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes there chances to it.if happened i will give you a big surprise.haaaaa..... haaaaa....

Unknown said...

யோசனை எல்லாம் ஒன்றும் கிடையாது உண்மையை சுற்றி வளைத்து கூறியிருக்கிறீர்கள்.. அவ்வளவே...

Unknown said...

Yes we have enough money and experiences too to bribe other parties from common wealth game loots.

Madhavan Srinivasagopalan said...

எப்படிசார் இந்தமாதிரிலாம் யோசிக்கறீங்க..
பின்னிட்டீங்க போங்க..

Jayadev Das said...

போன உலகக் கோப்பையில் பங்களாதேஷிடம் தொற்று சூப்பர் எட்டுக்குள் கூட நுழைய முடியாமல் வந்த இந்திய அணியை நம்ம ஆட்கள் ஒதுக்கி விட்டார்களா என்ன!! அடுத்த இரண்டே மாதத்தில் அதையெல்லாம் மறந்துவிட்டு ஐ.பி.எல் லில் ஐக்கியமாகிப் போனார்களே!! கோப்பையை வெல்கிரோமோ இல்லையோ அது இரண்டாம் பட்சம், எந்நேரமும் ஏதாவதோ ஒரு கிரிக்கெட் ஆட்டம் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும், BCCI, ICC காரப் பயல்கள் கல்லா கட்டிக் கொண்டே இருப்பார்கள், நம்மாட்கள் உலகக் கோப்பை வந்துவிட்டால் தீராத பஞ்சம் தீர்ந்துவிட்டது என்று கனவில் மிதந்து கொண்டே இருப்பார்கள். ஹா..ஹா..ஹா..

ஜோசப் இருதயராஜ் - காலகிறுக்கன் said...

ஐயா சாமி..... கடவுளே!
எப்படியய்யா இப்படி உதிச்சது சுர்ர்ர்ர்னு மண்டையில....

இதையே தான் நானும் யோசிச்சேன்...
ஆனா
இவ்வளவு டீப்பா யோசிக்கல... ஐயா.

டாப்பு டக்கரு....... பிண்ணிடீங்க போங்க!.

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!