Saturday, January 22, 2011

என்னவெல்லாம் நடக்குது?



விவசாயத்தை ஊக்கப்படுத்த பா.ம. க ஆட்சிக்கு வர வேண்டுமாம், அதன் நிறுவனர் ராமதாசு சொல்லி இருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், பா.ம.க ஆட்சிக்கு வருவதெல்லாம் உடனே நடக்கக் கூடிய காரியமா? ஆட்சிக்கு வந்தால்தான் இவர்கள் விவசாயத்தை ஊக்கப்படுத்துவார்களா? திமுக ஆட்சிக்கு வந்த புதுசுல பாமக, கூட்டணிக் கட்சியாத்தானே இருந்தாங்க, அப்போ ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து விவசாயத்த ஊக்கப்படுத்தி இருக்கலாமே? அரசு சென்னைக்கருகே துணைநகர திட்டம் கொண்டுவர முயன்ற போது, எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்து அதை நிறுத்தினார்கள். தங்களுக்கு நெருக்கமான பணமுதலைகள் பாதிக்கப்படக் கூடும் என்று அக்கறைதானே அவர்களை அப்படி ஆட்டுவித்தது? அதே அக்கறையை விவசாயதிற்கும் காட்டலாமே?

இவர்கள் உண்மையிலேயே விவசாயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், தைலாபுரத்தில் தனக்கு மட்டும் செய்து வரும் இயற்கை விவசாயத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தி மாநில அளவில் பரப்ப முயற்சிக்கலாம். மகனுக்கு மந்திரி பதவி வாங்க செய்யும் தில்லாலங்கடி வேலைகளில், ஒரு சதவீத முயற்சியை இதற்கு செய்தால் போதும் விவசாயத்திற்கு எவ்வளவோ நன்மை நடக்கும். அதே நேரம், சில விஷயங்களை அரசுதான் செய்ய முடியும். எப்படியோ விவசாயத்தைப் பற்றி தேர்தல் நேரத்திலாவது பேசிய ராமதாசுக்கு நன்றியைக் கூறுவோம்.

திமுக அரசுக்கு தேர்தல் நேரத்துல கெட்ட பெயர் வந்துடகூடாதுன்னு பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு கடினமாக இல்லாமல் வினாத்தாள் தயாரிக்கும் படி அரசு உத்தரவிட்டு இருக்கிறதாம். முதலில் அரசு மின்சாரப் பற்றாக்குறையை சரி செய்யட்டும். மாணவர்கள், பெற்றோர்கள் ஆதரவு தானாகக் கிடைக்கும். ஓட்டு இல்லாத மாணவர்களுக்கே இப்படி என்றால், பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்திருந்தால்? நல்லவேளை ஓட்டுரிமை வைத்துள்ள கல்லூரி மாணவர்கள், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. இருந்திர்ருந்தால் இன்னும் என்னென்ன கூத்துக்களெல்லாம் நடந்திருக்குமோ?

கவர்னர் முடிவை எதிர்த்து, கர்னாடக அரசு பந்த் நடத்துகிறதாம். அதுவும் எப்படி? கர்னாடக மக்களிடம் கவுரவத்தை இழந்த கவர்னரை எதிர்த்தாம். இதுவரைக்கும் 30 பஸ்சைக் கொளுத்தி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, காங்கிரசுக்குச் சரியான மாற்று நாங்கள்தான் என்று நிரூபித்துள்ளார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன்? ஒரு மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதை மறுப்பதற்கில்லை. பாவம் அவர்களும் எவ்வளவு நாள் எதிர்கட்சியாகவே இருந்துவிட்டார்கள், இப்பொழுதுதான் ஒரு அரிதான சந்தர்ப்பம் கிடத்திருக்கின்றது, கொஞ்சம் சம்பாரித்துக் கொள்ளட்டுமே?

மத்திய அமைச்சர் கபில்சிபல், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை விமர்சித்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கபில்சிபல் அப்படி என்ன கூறிவிட்டார்? தவறிழைத்தவர்கள் என்றைக்கு ஒத்துக் கொண்டு இருக்கிறார்கள்?  சரி அவருக்குதான் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை பற்றி கருத்துக் கூறக் கூடாது என்று தெரியாதாமே? அந்தப் பணத்தை அடிச்சவங்களையே ஒண்ணும் பண்ணப் போறதில்லை, பாவம் இவரு,போனாப் போகுதுன்னு மன்னிச்சு விட்ரலாமே? 

9 comments:

yeskha said...

நல்ல கற்பனை...

பரதேசித் தமிழன் said...

////yeskha said...
நல்ல கற்பனை...//////

என்ன சார் இப்படி கற்பனைன்னு சொல்லிட்டீங்க?

yeskha said...

பாஸ்....... போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி

பரதேசித் தமிழன் said...

///////yeskha said...
பாஸ்....... போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி
January 22, 2011 2:13 PM /////

புரியல பாஸ்....!

yeskha said...

ஸாரி பாஸ். கற்பனைங்குற வார்த்தை காப்பி, பேஸ்ட்டுல தப்பா வந்தது. ரெண்டாவது கமெண்ட்தான் நான் போட நினைச்சது.

yeskha said...

இந்த டயலாக் முடிஞ்ச உடனே கவுண்டமணிகிட்ட சொல்வாங்க இல்ல... அந்த மாதிரி சொல்லணும்.. "போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி"

yeskha said...

//விவசாயத்தை ஊக்கப்படுத்த பா.ம. க ஆட்சிக்கு வர வேண்டுமாம், அதன் நிறுவனர் ராமதாசு சொல்லி இருக்கிறார். //

இந்த டயலாக் முடிஞ்ச உடனே கவுண்டமணிகிட்ட சொல்வாங்க இல்ல... அந்த மாதிரி சொல்லணும்.. "போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி"

பரதேசித் தமிழன் said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....!
ஹஹஹா... தேங்ஸ் பாஸ், பட் எதுக்கு சாரியெல்லாம்?

டக்கால்டி said...

முழுதும் தெரிந்தவன் பேசமாட்டான். அரைகுறை தெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான்...வாய் சொல்லில் வீரர்கள் கேளடா மானிடா!

Post a Comment

கவனம், இப்போது உங்கள் ஐபி நம்பர் எங்களிடம்!